தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச கணினியில் லினக்ஸ் (அ) விண்டாஸ்? அரசு இதை கவனிக்குமா???


வணக்கம்,

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசம் மடிக்கணினி வழங்கவிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. அரசின் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் சம்பத்தப்பட்ட வளர்ந்துவரும் புது தொழில்நுட்பங்களை கற்றுத்தேற எதுவாக இருக்கும். அதே சமயம் இது கணிணி அறிவை மாணவர்கள் மூலம் மக்களுக்கும் ஏற்படுத்தும் என்பது மேலும் போற்ற கூடிய ஒன்றாகும்.

இப்படி ஒரு உயரிய செயல் சம்பதமாக அரசு அளித்திருக்கும் டெண்டர் அறிக்கை சற்று நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையின் தொழில்நுட்ப குறிப்பு அறிக்கையில் (பிரிவு-16, பக்கம்.என்-57) மாணவர்களுக்கு கொடுக்குப்படும் மடிக்கணினி லினக்ஸ் மற்று விண்டோஸ் ஆகிய இரண்டு இயக்கமுறைமைகளிலும் (Operating System) செயல்படுமாறு இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேவை இல்லாத ஒன்றாகும் இதன் மூலம் வரும் நன்மைகளை விட பிரச்சனைகளே அதிகம். மொத்தமாக 9,12,000 கணினிகளுக்கு அரசு டெண்டர் அளித்திருக்கிறது. இவைகளின் விண்டோஸ் ஆரம்ப (Windows Starter) இயக்கமுரையின் உரிமத்தொகை குறைந்த பட்சம் 1000 ரூபாய் என்று வைத்தால் சுமார் 91.2 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகிறது (உண்மையில் உரிமத்தொகை பல ஆயிரங்கள் ஆகும்). முழுக்க முழுக்க லினக்சில் மட்டுமே இயங்குமாறு இந்த கணினியை வடிவமைப்பதன் மூலம் இந்த  தொகை மொத்தமாக அரசுக்கு மிச்சம் ஆகும். அதுமட்டும் அல்லது மாணவர்களின் கல்விக்கு தேவையான அணைத்து மென்பொருள்களும் லினக்ஸ் இயக்கமுறைமையில் இலவசாமாக கிடைக்கும் பொழுது அதற்க்காக அரசு பெரிய தொகையை செலவழிக்க அவசியம் இல்லை.

இந்த நடவடிக்கை அரசு கஜானாவை மட்டும் அல்லது மாணவர்களையும் நேராக பாதிக்கும் ஒன்றாகும். அந்த காரணங்கள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன:

 1. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆகிய இரண்டும் முற்றிலும் மாறுபட்ட இயக்கமுறைமைகள் ஆகும், ஒரே சமயம் இரண்டையும் பயன்படுத்துவது அல்லது கற்றுக்கொல்லுவது மிகவும் குழப்பம் மற்றும் சிரமம் வாய்ந்த ஒன்று.
 2. விண்டோஸ் ஆரம்பம் (Windows Starter) என்றழைக்கப்படும் இந்த இயக்கமுறைமை பல வசதிகள் இல்லாமல் அளிக்கப்படும் ஒரு இயக்கமுறைமையாகும். இதனைக்கொண்டு 64bit, muti-processor போன்ற புதிய தொழில்நுட்பங்களை கொண்ட கணினியை பயன்படுத்த முடியாது.
 3. இந்த இயக்கமுறைமை டூயல் கோர் மற்றும் குவாட் கோர் (Dual Core & Quad Core) ஆகிய புதியவகை செயலிகளை(Processor) கொண்டு இயங்க முடியாதது. இதனால் பலவருடங்கள் பின்தங்கிய தொழில்நுட்பத்தை மாணவர்களின் தலையில் கட்டிவிடும் அபாயம் உள்ளது.
 4. அதே போல் இந்த இயக்கமுறைமையில் இன்னொரு திரையை பொருத்துவது, இணைய இணைப்பை பகிர்ந்துகொள்ளுவது என கல்விக்கு ஏதுவான பல செயல்களை செய்ய முடியாது.
 5. பன்மொழி பயன்பாட்டு இயக்கம் இந்த இயக்கமுறைமையில் கிடையாது இதனால் மாணவர்கள் ஆங்கில மொழி நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்ற சூழல் உருவாகிறது, எனவே கிராமப்புறங்களில் தமிழ் வழி பயின்ற மாணவர்கள் கணிணி கற்பதிலும் பயன்படுததிலும் சிரமம் ஏற்படும்.
 6. அத்துடன் விண்டோஸில் பெரும்பாலும் சேதத்தை உண்டு செய்யும் வைரஸ் எனும் மென்பொருள்களை களை எடுக்க அண்டி-வைரஸ் எனப்படும் மென்பொருளையும் நிருவவேண்டி உள்ளது. அரசு அறிக்கைப்படி இந்த மென்பொருளுக்கான உரிமம் 1வருட காலத்திற்கு மட்டுமே கொடுக்க பட இருக்கிறது, அதற்க்கு அடுத்த வருடத்தில் இருந்து ஆகும் உர்மத்தொகை மாணவர்கள் செலவழிக்க வேண்டி இருக்கும்.
 7. மாணவர்களுக்கு பெரும்பாலும் பயன்படும் விண்டோஸ் ஆபிஸ் எனும் மென்பொருள் பற்றி எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதை தனியாக வாங்கவேண்டும் என்றல் உரிமதொகை சுமார் 5000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை மாணவர்கள் செலவழிக்க வேண்டி இருக்கும்.

இவ்வளவு தொகை செலுத்தி மாணவர்கள் உரிமங்களை பெருவது அன்பது பெரும் கேள்வி குறியாய் எழுந்துள்ளது. அதே சமயம் பெரிதாக எதற்கும் பயன்படுத்த முடியாத இந்த இயக்கமுறையை கணினிகளில் நிருவுவதன்மூலம் மாணவர்கள் திருட்டுத்தனமாக உரிமம் பெறப்படாத மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இந்த பிரச்சனைகளை தவிர்த்து திறமூல (Open Source) தொழில்நுட்பத்தின் வாயிலாக  இலவசமாக கிடைக்கும் லினக்ஸ் இயக்கமுறைமையை பாயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம். அவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

 1. லினக்ஸ் இயக்கமுறைமை முழுக்க இலவசமான ஒன்றாகும், அதற்காக எந்த உரிமத்தொகையும் செலுத்த வேண்டியதில்லை.
 2. லினக்ஸ் இயக்கமுறைமையில் வைரஸ் என சொல்லப்படும் பதிப்பை ஏற்படுத்தும் மென்பொருள் எந்த தாக்கமும் செய்ய இயலாது, எனவே அண்டி-வைரஸ் மென்பொருள் நிறுவுவதையும் அதற்காக உரிமம் பெறுவதும் தவிர்க்கபடும்.
 3. லினக்ஸ் இயக்கமுறைமை புதிதாக வெளி வரும் எல்லாவகை செயலிகளையும்(Processor) கொண்டு செயல்படும் ஒன்றாகும். இதனால் பழைய தொழில்நுட்பத்தை கொண்டு இயங்க வேண்டிய நிலை வராது.
 4. அத்துடன் லினக்ஸ் இயக்கமுறையை தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் நிருவிக் கொள்ளல்லாம், இதன்மூலம் தமிழ் வழி கல்வி கற்போர் சிரமமின்றி கணினியை பயன்படுத்த முடியும்.
 5. விண்டோஸ் ஆபிசுக்கு நிகரான லிபரே ஆபிஸ் (Libre Office) எனும் மென்பொருள் இலவசாமாக உரிமத்தொகை ஏதுமின்றி கிடைக்கிறது. இது மாணவர்களின் கல்வி தேவைக்கு ஒரு பெரும் உதவியாக அமையும்.
 6. அதேபோல் இந்த இயக்கமுறைமையை நமது தேவைக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். இதில் கல்விக்கெனவே வெளிவரும் எடுபுண்டு (Edubuntu) குறிப்பிடத்தக்கது.
 7. இவை அனைத்திற்கும் மேலாக மாணவர்களின் கல்வி தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையான மென்பொருள்களைக் கொண்டு புதிதான ஒரு லினக்ஸ் பரவலை (Distribution) உருவாக்க முடியும்.

இப்படி பல நல்ல விசயங்களும், பல மேன்மைகளும் இலவசமாக கிடைக்கும் பொழுது, எதற்காக அரசு மாணவர்களை பல வகைகளில் முடக்கி போடும் ஒரு விசயத்தில் காசை செலவிட வேண்டும். அந்த தொகையை சேமித்து அதன்மூலம் இன்னும் பல உபயோகமான திறமூல மென்பொருட்கள் வெளிவர வகை செய்யலாம். இத்தாலி, பிரான்சு, பிரேசில் போன்ற பல அண்டை நாடுகளில் அரசுகள் பள்ளிகள் மட்டும் இன்றி அரசு சார்ந்த இதர துறைகளிலும் முழுக்க திறமூல தொழில்நுட்பத்தை பயன் படுத்துகின்றன. பக்கத்துக்கு மாநிலமான கேரளாவில் லினக்ஸ் மற்றும் திறமூல பாடங்கள் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு கடந்த 5 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.

விண்டோஸ் எனப்படுவது பரவலாக உபயோகபடுத்தப்படும் ஒரு இயக்கமுறைமை என்பது தவிர வேறு எந்த பயபாடும் இல்லை, அதற்கு பதிலாக பாதிப்புகளே உள்ளன. மேலே குறிபிட்டுள்ள விவரங்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு தனது இரண்டு வகை செயல் முறையை மாற்றி லினக்சில் மட்டும் இயங்கும் ஒருவன்ன செயல்முறை அமைப்புடைய கணினியை வழங்குதல் மாணவர்களுக்கு பெரும் அளவில் பயன்படும் அதே சமயம் அரசின் செலவையும் குறைக்கும்.

நன்றி.
மூலம்: Google Document

Published by Tha.Suresh

No pain No gain!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: