தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச கணினியில் லினக்ஸ் (அ) விண்டாஸ்? அரசு இதை கவனிக்குமா???


வணக்கம்,

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசம் மடிக்கணினி வழங்கவிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. அரசின் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் சம்பத்தப்பட்ட வளர்ந்துவரும் புது தொழில்நுட்பங்களை கற்றுத்தேற எதுவாக இருக்கும். அதே சமயம் இது கணிணி அறிவை மாணவர்கள் மூலம் மக்களுக்கும் ஏற்படுத்தும் என்பது மேலும் போற்ற கூடிய ஒன்றாகும்.

Read more >>

Advertisements

Linux 20-years celebration video in tamil


Hi friends,

At 1991, Linus Torvalds, released his Kernel as open source. After that, the Linux Revolution happened.

To celebrate the 20 years of Linux, The Linux Foundation, is doing various activities.
Explore it here. http://www.linuxfoundation.org/20th
It released an animation video.

My Brother T.Shrinivasan wanted to translate the video in tamil. So he asked his friend to transcribe the audio as English text. He then also asked me to  convert the English text into Tamil text.

Here the original English version video:

http://www.youtube.com/watch?v=5ocq6_3-nEw

Here the tamil version of the above video:
http://www.youtube.com/watch?v=gZKI0u18iLQ

More info: http://goinggnu.wordpress.com/2011/05/14/celebrating-20-years-of-linux-a-tamil-video/

🙂 🙂 🙂

சும்மா தோணுது !!! -1


இப்படி இருந்தா நல்லா இருக்கும் ல !

நமது உபுண்டு package- காற்றிலேயே  கலந்து வெளியிட்டா எப்படி இருக்கும் ?

 
நமக்கு ஏதேனும் package- install  செய்யணும் னா அப்படியே FM  ஆன் பண்ணுற மாதிரி நம்ப computer-ல ஒரு button  செட் பண்ணிட்டு
ஆன் பண்ண உடனே காத்துல  இருக்குற package-ஐ  இன்ஸ்டால் பண்ணிக்கணும்

மொதல்ல Package source-ஐ  Internet மூலமா வரத something process பண்ணி AIr -ல கலந்து விட்டுடனும். அப்புறம் satellite  முலமா உலகம் full ah   Internet இல்லாமலேயே package-களை install செயிஞ்சுகனும்  🙂    😛

உங்களது Gmail inbox-ல் உங்களது தனிப்பட்ட மெயில் -களை தவிர மற்ற மடலாடற் குழு (mailing List) மெயில் -களால் நிறைந்துள்ளதா???


Hai friends,

உங்களது Gmail inbox-ல் உங்களது தனிப் பட்ட மெயில் -களை தவிர மற்ற மடலாடற் குழு (mailing List) மெயில் -களால் நிறைந்துள்ளதா???

கவலை வேண்டாம்!!!

1. மடலாடற் குழுவில் உள்ள ஏதேனும் ஒரு மெயில்-ஐ திறக்கவும்.

2. அங்கு உள்ள “show details”  என்பதனை க்ளிக் செய்யவும்.

s

"show details" -ஐ க்ளிக் செய்யவும்.

3.  பின், கீழே காட்டும் “Filter messages from this mailing list” என்பதனை க்ளிக் செய்யவும்.

"Filter messages from this mailing list"-ஐ க்ளிக் செய்யவும்

4. “Create a Filter” எனும் பகுதியில் உள்ள “Next Step” என்பதனை க்ளிக் செய்யவும்.

"Next Step"-ஐ க்ளிக் செய்யவும்

5. இங்கு உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்யவும். ( “Skip the inbox”, “Apply the label” )

6. “Apply the label” -லில் “Choose label” -ன் கீழ வரும் “New label ” என்பதனை க்ளிக் செய்து உங்களுக்கு விருப்பமான பெயரை டைப் செய்யவும்.

"Lebel Name"-ல் உங்களுக்கு விருப்பமான பெயரை டைப் செய்யவும்.

7. கடைசியாக “Apply also filter … below ”  என்பதனை தேர்வு செய்து ” Create Filter”-ஐ க்ளிக் செய்யவும்.

8. இப்போது உங்களது ஜிமெயில் திரையின் இடது புறம் “நீங்கள் கொடுத்த பெயரில் ஒரு லேபள்” உருவாகி இருக்கும்.

இனி முதல் நீங்கள் தேர்வு செய்த மடலாடற் குழுவில் இருந்து வரும் மெயில்கள் உங்களது இன்பாக்ஸ்-ல் வந்து அடைத்துக் கொள்ளாது.

அந்த மடலாடற் குழுவில் இருந்து வரும் மெயில்களை பார்க்க விரும்பினால், உங்களது லேபிள்-ஐ க்ளிக் செய்தால் போதும்.

அனைத்து மெயில்களும் இங்கு வந்துவிடும்.

இதே போன்று உங்களால் எண்ணற்ற லேபள் -களை உருவாகிக் கொள்ள முடியும்.

Great Linux vs stupid windows ;-)


hai friends,

  1. Why we need to use Linux???
  2. Why particularly Linux???
  3. why not windows?
  4. Why windows is big stupid…!!??
  5. Comparison between Our Linux and windows. 🙂

 

You want the answer go to the following website.

http://linux.oneandoneis2.org/LNW.htm

விரைவில் தமிழிலும் 😉

Some Fun Snaps:

 

கிட்ட வருவ??? 😛

 

காலி ஆய்டுவ.. !

 

 

டுமீல் ... !

 

 

...தா பீரங்கி டா.. 😉

 

 

தீப்பொறி திருமுகம் இப்படி தான் ஆகும்... 😉

 

 

இந்த அசிங்கம் உனக்கு தேவையா ??? 😀

 

 

கடைசியா நான் சொல்ல வரது என்னனா???

 

 

Just for fun..  😉 hehe..B-)

 

 

கட்டற்ற மென்பொருள்Free Open Source Software  [FOSS]

கட்டற்ற மென்பொருள் Free Open Source Software[FOSS] என்பது என்ன?

இன்று நாம் ஏன் அதைப்பற்றி பேசவேண்டும்?

கட்டற்ற மென்பொருள் open source software என்பது இலவசமாக கிடைக்கும் ஓர் மென்பொருள். FOSS என்பது விலையில் மட்டும் இலவசம் என்று கருத்தில் கொள்ளக்கூடாது. “சுதந்திரம்” என்பது மட்டுமே சுதந்திரங்களை தருகிறது. அவையாவன

0  – எவ்வித தடையும் இன்றி, எந்த ஒரு மென்பொருளையும் எங்கு வேண்டுமானாலும் உபயோகிக்க சுதந்திரம்.

1  – மென்பொருள் எப்படி வேலை செய்கிறது மற்றும் தெரிந்ததை மாற்றி உபயோகிக்க சுதந்திரம்.

2  – மாற்றி அமைத்த மென்பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விநியோகிக்க சுதந்திரம்.

3  – மென்பொருளை வளர்க்கவும், வளர்த்ததை பொதுமக்களிடம் வழங்கவும் சுதந்திரம்‘.

இதன்  மூலம் FOSS என்பதனை விலையில் மட்டுமல்ல, நமக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சுதந்திரங்களையும் தரம் ஒரு சிறப்பான அமைப்பாகும்.

Microsoft-ம் ஏகாதிபத்தியமும் :-

இதுவரை  உலகின் முதல் (No. 1) பணக்காரராக விளங்கும் பில்கேட்ஸ் தொடங்கிய நிறுவனம் தான் ‘Microsoft’ இவரின் இந்த அதீத வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் பிண்ணனிகளை நீங்கள் கேட்டால் அது உங்களை நிலைகுலையச் செய்யும். அது மிகவும் மனித நேயமற்ற செயல் மற்றும் அநீதி ஆகும்.

நாம்  இப்போது ஒரு கனிணி வாங்க  வேண்டுமெனில் அதற்கு ஆகும்  செலவு ரூபாய். 30,000/- தான் ஆனால் வெறும் கனிணியை வைத்துக் கொண்டு நம்மால் எதுவும் செய்ய இயலாது. அது இயங்க இயங்குதளம்(Operating System) என்று அழைக்கப்படும் ‘OS’ தேவை. உதாரணமாக Microsoft’s Windows ‘OS’ நமக்கு தேவையெனில் அதை விலை கொடுத்து வாங்க வேண்டும். அதன் விலை 7,500/- ரூபாய் ஆனால் வெறும் ‘OS’ வைத்துக்கொண்டும் நம்மால் ஏதும் செய்ய இயலாது.  ‘Home Edition’ எனப்படம் வீட்டில் மட்டும் உபயேகிக்கக்கூடிய ‘OS’ என்றாலும் அதை இயக்கக் தேவையான அடிப்படையான மென்பொளையும் நாம் விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். அதுவும் சில வருட உபயேகத்திற்கு மட்டுமே, மற்றும் அப்படி விலைக் கொடுத்து வாங்கிய மென்பொருள்களை ஒரேயொரு கனிணிக்கு மட்டுமே நிறுவ வேண்டும் என்ற விதி உள்ளது மேலும் அதை நாம் யாருக்கும் இலவசமாகவோ பணத்திற்கோ விநியோகிக்கக் கூடாது, அண்ணன் தங்கையாக இருந்தாலும் கூடவே கூட!!!!!!!!!!!!!

மென்பொருள்களின் விலை:-

Microsoft Office – 15,000/-  Photoshop – 50,000/- Multimedia Editors – 50,000/-  Antiviruses – 1,500

Games – 3,000 இது போன்ற அடிப்படை மென்பொருள்களின் குறைந்தபட்ச தோராயமான விலை ஒரு லட்சம். இது நமது கனிணி இயந்திரத்தின் விலையை விட மூன்று மடங்கு அதிகம். இது வெறும் Home Edition  என்று கூறப்படும் வீட்டு உபயோகத்திற்கு மட்டும் ஆகும் செலவு.

இதுவே ‘Enterprise Edition’ எனில் ஒரு கனிணிக்கு தேவையான ‘OS’ -க்கு ஆகும் செலவு தோரயமாக ரூபாய்20,000/-  மற்றும் அடிப்படை மென்பொருள்களுக்கும் ஆகும் செலவு தோரயமாக ரூபாய் 1,50,000/- நமது நாட்டில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அதில் TCS, CTS, INFOSYS போன்ற நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 50,000கனிணிக்கள் உள்ளன(இருக்கலாம்) எனவே ஒரு நிறுவனம் சில குறிப்பிட்ட வருடங்களுக்கு செய்யும் செலவு ரூபாய் 75,00,000,000/- இது ஒரு நிறுவனத்திற்கு ஆகும் செலவு எனில் நமது நாட்டில் எத்தனை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியும்!! தோராயமாக 10000……………. இவ்வளவு பெருந்தொகை  Microsoft போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே செல்கிறது. இப்போது சொல்லுங்கள் நமது நாடு “ஏழை நாடா…”? நமக்கு பின் சுதந்திரம் வாங்கிய சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் ‘FOSS’ எனப்படும் கட்டற்ற மென்பொருள் உபயோகிக்கின்றன. இந்நாடுகளின் வளர்ச்சி நமக்கு கண்கூடாகத் தெரியும்.

இவ்வளவு விவரங்கள் அறிந்தும் நம்மக்கள்  பலர் கட்டற்ற மென்பொருக்கு மாறாததன் காரணம் அவர்கள் Window எனும் மாயைக்கு அடிமையானததுதான் நம்மக்களுள் பலர் Pirate எனப்படும் திருட்டுத்தனமான மென்பொருளை மட்டுமே உபயோகம் செய்கின்றனர். இவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் Microsoft-ன் விதியின்படி முதல் குற்றப்பத்திரிக்கை அறிக்கை(FIR) போடக்கூடிய அளவுக்கு திருட்டு செயல் ஆகும். நாம் ஏன் இன்னும் திருடர்களாகவே இருக்க வேண்டும்.

தேவை மாற்றம் மட்டுமே :-

கட்டற்ற மென்பொருளின் நான்கு விதிகளின்  படி நீங்கள் இயங்குதளம் மற்றும் மென்பொருள்களை CD/DVD -ல் போட்டு இலவசமாகவோ/பணத்திற்கோ விநியோகம் செய்யலாம். LINUX என்பது கட்டற்ற மென்பொருளின் ஒரு முக்கியமான ‘OS’ ஆகும். LINUX ன் பெரிய பலம் என்னவெனில் அதனை VIRUS Attack செய்யாது. Windows வாடிக்கையாளர்கள் பெரிதும் பயப்படுவது ‘Virus’ களுக்கு மட்டுமே. ஆனால் ‘LINUX’ -ல் இந்த வார்த்தைக்கு இடமே இல்லை.

மேலும்  Microsoft-ன் எந்தவொரு தொழிற்நுட்பத்தின் உட்தகவலும் (Source code)  நமக்கு கிடைப்பதில்லை. இயந்திரங்களுக்கு மட்டும் புரியும் “BINARY CODE” களாக தரப்படுகிறது. ஆனால் ‘LINUX’ ல் “Source Code” நமக்கு தரப்பட்டு, நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க உரிமம் தரப்படுகிறது.

நம்மக்கள் பெரும்பாலும் முயற்சி செய்வதே இல்லை ‘LINUX’ என்ற உடனே அதுவா? அதை இயக்க மிகவும் கடினம் என்ற எண்ணத்துடமே உள்ளனர். ஆனால் தற்போது மிகப்பெரிய மாற்றங்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

LINUX -க்கு நீங்கள் புதியவரா? உங்களுக்கு உதவ இந்த ஒரு உலகமே காத்துகொண்டிருக்கிறது. அது ‘LUG’ எனப்படும் “LINUX USER GROUP” ‘ILUGC’ என்பது “Indian Linux user group chennai” எனும் குழுமம் http://ilugc.in இங்கு சென்று ஒரு மின்னஞ்சல் செய்தால் போதும் உங்களுடைய LINUX தேவைகள்/கேள்விகள் பூர்த்தி செய்யக் காத்துக்கொண்டிருக்கிறது.

“அருமை உடைத்தென்று அகவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்”

-எனும் வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன்.

-த. சுரேஷ்.